தொண்­ட­ரா­சி­ரி­யர்­க­ள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!

வடக்­கில் பல ஆண்­டு­க­ளா­கத் தொண்­ட­ரா­சி­ரி­யர்­க­ளாகக் கட­மை­யாற்றி தற்­போது இடம்­பெ­ற­வுள்ள நேர்­மு­கத்­தேர்­வுக்கு அழைக்­கப்­ப­டாது விடு­பட்ட தொண்­ட­ரா­சி­ரி­யர்­கள் பத்­த­ர­முல்ல கல்வி அமைச்­சின் அலு­வ­ல­கத்துக்கு  நேற்று நீதி கோரிச் சென்று போராட்­டம் நடத்­தி­னர்.

இதன்­போது முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மு.சந்­தி­ர­கு­மார், கல்வி அமைச்­சுக்கு முன்­னால் திரண்ட தொண்­ட­ரா­சி­ரி­யர்­க­ளைச் சந்­தித்­தார். கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் வே.இரா­தா­கி­ருஷ;ணனை­யும் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னார்.

தொண்­ட­ரா­சி­ரி­யர்­களை அமைச்­ச­ரும், அமைச்­சின் செய­ல­ரும் சந்­தித்­த­னர். நேர்­மு­கத் தேர்­வுக்கு அழைக்­கப்­ப­டாத ஆசி­ரி­யர்­க­ளின் விப­ரங்­க­ளைத் திரட்டி, உண்­மைத் தன்­மை­யினை அறிந்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று உறு­தி­ய­ளித்­த­னர்.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி