எட்டு மாதக் குழந்தையுடன் தொடருந்தில் பாய்ந்து தற்கொலை!

வெல்லாவ, பல்லேகொட்டுவ பகுதியில் நபரொருவர், தனது எட்டு மாதக் குழந்தையுடன் தவறான முடிவெடுத்துத் தொடருந்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று நடந்தது.

காங்கேசன்துறையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தொடருந்திலேயே குழந்தையுடன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பல்லேகொட்டுவ – வெல்லாவ பகுதியை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாகவே இவர் இவ்வாறு தவறானமுடிவெடுத்தார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி