கூட்­ட­மைப்புடன் இணை­வது குறித்து நிபந்தனை!

தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை கூட்­ட­மைப்பு நிறை­வேற்­று­வ­து­டன் கூட்­ட­ மைப்­புக்கு என யாப்பு ஒன்­றும் உரு­வாக்­கப்­பட்­டால் மட்­டுமே அவர்­க­ளு­டன் இணை­வது குறித்து யோசிக்க முடி­யும், அது­வரை இணைய மாட்­டோம்.

இவ்­வாறு தெரி­வித்­தார் ஈபி­.ஆர்.எல்.எப் அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பில் ஈபி­.ஆர்.எல்.எப் இணைய விரும்­பி­னால் அதனை நாம் பரி­சீ­லிக்­கத் தயார் எனக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்தி­ரன் அண்­மை­யில் கூறி­யி­ருந்­தமை குறித்தே அவர் இத­னைத் தெரி­வித்­தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தா­வது:

தேர்­தல் காலத்­தில் மக்­க­ளுக்கு வழங்­கிய ஆணையை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தூக்கி எறிந்து விட்­டது.கடந்த நாடா­ளு­மன்ற தேர்­த­லின்­போது வடக்கு கிழக்கு இணைப்பு, கூட்­டாட்சி முறை­யி­லான தீர்வு போன்ற விட­யங்­களை அவர்­கள் கைவிட்­டு­விட்­ட­னர்.

இந்த விட­யங்­க­ளைக் கூட்­ட­மைப்­பின் ஊட­கப் பேச்­சா­ளர் சுமந்­தி­ரனே ஊட­கங்­கள் வாயி­லா­கக் கூறி­யுள்­ளார்.வடக்கு கிழக்கு இணைப்பு இப்­போ­தைக்­குச் சாத்­தி­ய­மில்லை என்­றும் அவரே கூறி­யுள்­ளார். அது மட்­டு­மன்றி பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை கொடுப்­ப­தற்­குச் சம்­ம­த­மும் வழங்­கி­யுள்­ளார். இவ்­வா­றாக மக்­க­ளுக்கு வழங்­கிய ஆணை­க­ளைத் தூக்கி எறிந்­து­விட்­டுக் கூட்­ட­மைப்­பி­னர் செயற்­ப­டு­கின்­ற­னர்.

கூட்­ட­மைப்­புக்கு என்று யாப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்­டும்.கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி முக்­கிய முடி­வு­களை எடுப்­ப­தற்கு வழி­ச­மைப்­ப­தாக அது இருக்­க­வேண்­டும். அப்­போ­து­தான் கூட்­ட­மைப்­பில் உள்ள அனைத்து தரப்­பும் ஒரு­மித்­துச் செயற்­ப­டு­வது தொடர்­பாக ஆராய முடி­யும்.

நாம் பல தடவை வலி­யு­றுத்­தி­யும் கூட்­ட­மைப்பு யாப்­பினை உரு­வாக்க எந்த முயற்­சி­யும் எடுக்­க­வில்லை. எதிர்­வ­ரும் காலங்­க­ளில் இந்த இரண்டு விட­யங்­க­ளி­லும் தீர்க்­க­மான முடி­வினை கூட்­ட­மைப்பு எடுத்­தால் மட்­டுமே இணைவு குறித்து நாம் பரி­சீ­லிப்­போம்.என்­றார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி