தேசிய அரசாங்கத்தில் மீண்டும் குழப்ப நிலை!!

அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை சேர்ந்த 16 பேரும் எதிர்க்கட்சியில் அமர்வதற்கு உறுதியாக தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டபிள்யு. டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மகிந்த ஆதரவு அணியான கூட்டு எதிர்க்கட்சியுடள் இணைந்து செயற்படுவது குறித்து இதுவரையிலும் கலந்துரையாடவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய 16 பேரும் இன்று மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “தமது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக” மேலும் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கம் குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து கொழும்பு அரசியலை மேலும் இறுக்கமடைய செய்யும் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி