சிறந்த நிர்வாகிகளை உருவாக்க முழுமூச்சுடன் செயற்படும் சமூக மேம்பாட்டு அமைப்பு!

கல்வி பொது நிர்வாக சேவை முகாமைத்துவ சேவையாளர்களுக்கான தயார்படுத்தல் வகுப்புக்களை நடத்தி சிறந்த நிர்வாகிகளை உருவாக்க தமது அமைப்பு முழுமூச்சுடன் செயற்படும் என நாளைய குரல் சமூக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் நி.சுரேஸ் தெரிவித்துள்ளார்.

நாளைய குரல் சமூக மேம்பாட்டு அமைப்பும் பொது மக்களும் இணைந்து சித்திரை புத்தாண்டு நிகழ்வினை நடத்தியிருந்தது.

நாவிதன்வெளி பிரதேசத்தில் 15ஆம் கிராம பொது மைதானத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

எமது பிரதேசத்தின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய கடப்பாடு இங்குள்ள அனைவருக்கும் இருக்கின்றது.

எமக்குள் எந்த பிரிவினைகளையும் உண்டுபண்ணாது சகலரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும், புரிந்துணர்வுடனும் செயற்படுவோமாக இருந்தால் எமது சமூகம் சார்ந்த நிறைய விடயங்களை சாதிக்க முடியும்.

கல்வியில் நாங்கள் உயர்ந்த நிலையை பெற்வேண்டுமாக இருந்தால் அதற்கு எம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அதற்காக நாங்கள் அதிகமான நேரத்தினை செலவிட வேண்டும்.

அவ்வாறு செலவிடும் பட்சத்திலேதான் சாதனைகளை நிலைநாட்ட முடியும். இந்த பிரதேசத்தை பொறுத்தவரையில் தரமான கல்வியறிவு நிரம்பப்பெற்ற கல்வியலாயர்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி