கனி­ய­வ­ளத் திணைக்­க­ளம் இல்லாத வடக்கு!

வடக்­கில் மணல் தட்­டுப்­பாட்­டினை கருத்­தில் ­கொண்டு 5 மாவட்­டத்­துக்­கும் தேவை­யான கனிய வளங்­க­ளைப் பெறு­வ­தற்­கான கூட்டு முயற்­சி­யாக கனி­ய­வ­ளத் திணைக்­க­ளம், புவிச்­ச­ரி­த­வி­யல் திணைக்­க­ளங்­க­ ளின் அலு­வ­ல­கம் விரை­வில் வடக்­கில் அமைக்கப்படும் என்று முத­ல­மைச்­சர் தல­மை­யில் கூடிய கூட்­டத்­தில் தெரி­விக்­கப்­பட்ட நிலை­யில் 10 மாதங்­க­ளாக எந்த முன்­னேற்­ற­மும் இல்லை என்று கட்­ட­டத் தொழி­லா­ளர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

வடக்கு மாகா­ணத்­தின் 5 மாவட்­டச் செய­லர்­க­ளை­யும் அழைத்து விரை­வில் ஆராய்ந்து ஒரு முடி­வினை எட்­டு­வது என கடந்த யூலை 31ஆம் திகதி வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தல­மை­யி­லான கூட்­டத்­தில் முடி­வெ­டுத்த நிலை­யில் இன்­று­வரை எந்த முன்­னேற்­ற­மும் கிடை­யாது என கட்­டு­மான தொழி­லா­ளர்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

மணல் மற்­றும் கிர­வல் விநி­யோ­கத்­தில் உள்ள தடங்­கள்­களை நீக்கி அதனை சீராக விநி­யோ­கிப்­பது தொடர்­பில் ஆரா­யும் முக­மாக சிறப்­புக் கூட்­டம் கடந்த யூலை 31ஆம் திகதி யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரன் மற்­றும் பொலிஸ்மா அதி­பர் பூஜித ஜெய­சுந்­தர, யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லா­ளர் நா.வேத­நா­ய­கன் ஆகி­யோ­ரின் தலைமை­யில் இடம்­பெற்­றது.

இதன்­போது வடக்­கில் மணல் விநி­யோ­கத்­து­டன் தொடர்­பு­டைய திணைக்­க­ளங்­களை கட்­டுப்­ப­டுத்­தும் தலமை அலு­வ­ல­கங்­கள் வட மாகா­ணத்­தில் இல்­லாது தெற்­கில் உள்­ளமை ஒரு பெரும் பிரச்­சி­னை யாகும். எனவே இது தொடர்­பில் உரிய திணைக்­க­ளங்­கள் கவ­னம் செலுத்தி குறிப்­பாக கனி­ய­வ­ளத் திணைக்­க­ளம், புவிச்­ச­ரி­த­வி­யல் திணைக்­க­ளங்­க­ளின் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­கள் அநு­ரா­த­பு­ரத்­தில் உள்­ள­னர்.

இத­னால் இவர்­கள் அந்த மாகாண அதி­கா­ரி­க­ளின் சொல்­லின் கீழ் இயங்­கும் நில­மையே காணப்­ப­டு­கின்றது. அத்துடன் அவர்களுக்கு இந்தப் பி­ர­தே­சத்­தின் நில­மை­, தேவை மற்­றும் மக்­கள் பிரச்சினை தொடர்பில் தெரியாது.

இத­னால் உண்­மை­யான கனி­ய­வ­ளத்­தேவை தெரி­வ­தில்லை என­வும் வடக்­கில் மணல் தட்­டுப்­பாட்­டினை வைத்து பல­ரும் பல விலை­க­ளில் விற்­பனை செய்து அநா­வ­சிய பிரச்சினை­கள் எழு­கின்றது எனச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இவற்­றின் அடிப்­ப­டை­யில் வடக்­கின் 5 மாவட்­டத்­துக்­கும் தேவை­யான கனிய வளங்­களை பெறு­வ­தற்­கான கூட்டு முயற்­சி­யாக 5 மாவட்ட அரச அதி­பர்­க­ளை­யும் அழைத்து விரை­வில் ஆராய்து ஓர் முடி­வினை எட்­டு­வது.

அதே­போன்று 5 மாவட்­டங்­க­ளுக்­கும் நிர்­ண­யிக்­கப்­பட்ட விலையை தீர்­மா­னித்து அந்த விலை­யி­லேயே பொருளை வழங்­கு­வது, மாகா­ணத்­தில் ஒரு மாவட்­டத்­தில் இருந்து இன்­னு­மோர் மாவட்­டத்­துக்கு கொண்­டு­போக முடி­யாத சூழ­லில் மாகா­ணத்­துக்கு வெளி­யில் கொண்டு செல்­லப்­ப­டு­வது தொடர்­பில் ஆராய்­வது, கனி­ய­வ­ளங்­க­ளுக்­கான அனு­ம­தியை வழங்­கும் அலு­வ­ல­கம் அல்­லது குறைந்த பட்­சம் அதி­காரி வடக்­கில் இயங்க ஆவண செய்­வது போன்ற தீர்­மா­னங்­களை மேற்­கொண்­ட­னர்.

இவ்­வாறு தீர்­மா­னங்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு 10 மாதங்­கள் கடந்த நிலை­யில் எந்­த­வி­த­மான முன்­னேற்­ற­மும் காணப்­ப­ட­வில்லை. வடக்­கின் சகல மாவட்­டத்­தி­லும் இன்­று­வரை மணல் விநி­யோ­க­மும் கிர­வல் விநி­யோ­க­மும் ஒரு பெரும் பிரச்­சி­னை­யா­கவே காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான பணி­கள் இடம்­பெ­ற­வில்லை.

இத­னால் வடக்­கில் இன்­று­வரை தொழி­லா­ளர்­கள் அதி­க­ள­வில் உள்­ள­னர் இவர்­க­ளுக்­கான தேவை­யும் அதி­க­ள­வில் உள்­ளது. ஆனால் மூலப்­பொ­ருளை பெறு­வ­தில் உள்ள இடர்­பாடு கார­ண­மாக இதே சம்­ப­ளத்துக்குத் தெற்குச் சென்று பணி­யாற்­றும் நில­மை­யும் உரு­வா­கின்­றது.

இவற்­றினை கருத்­தில்­கொண்டு மிக விரை­வாக முத­ல­மைச்­சர் கூட்­டத்­தில் எட்­டிய தீர்­மா­னத்­தின்­பால் நட­வ­டிக்கை மேற்­கொண்டு வடக்கு கட்­டு­மா­னத் தொழி­லா­ளர்­க­ளின் தெருக்­க­டியை தீர்க்க முன் வர­வேண்­டும். எனக்­கோ­ரிக்கை முன்­வைக்­கின்­ற­னர்.

இதே­வேளை யூலை மாதம் 31ஆம் திகதி இடம்­பெற்ற கலந்துரையாட லில் மேலதிக மாவட்ட செயலர் காணி, பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன் இராணுவ அதி காரிகள் மற்றும் பொலிசாருடன், கனியவளத் திணைக்கள அதிகாரி கள் , புவிச்சரி தவியல் திணைக்கள அதிகாரிக ளும் கலந்து கொண்ட மையும் குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி