ஐ.தே.கட்சியை வன்­மை­யா­கக் கண்­டிக்கிறோம்!!

தங்­க­ளுக்கு நெருக்­கடி ஏற்­ப­டும்­போது தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்­பின் ஆத­ர­வைக் கோரிப் பெற்­றுக்­கொள்­ளும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னர் சந்­தர்ப்­பம் கிடைக்­கும் போதெல்­லாம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைப் புற­மொ­துக்­கி­ விட்டு, வடக்கு – கிழக்­கில் தமிழ் மக்­க­ளின் தலை­மையை நேர­டி­யா­கக் கைப்­பற்ற முனை­யும் ஊடு­ரு­வல் நட­வ­டிக்­கை­களை நாம் வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றோம்.

இது தமி­ழர் தாய­கத்­தின் எல்­லைப் பகு­தி­க­ளைச் சிங்­கள மயப்­ப­டுத்­தும் நய­வஞ்­சக ஆக்­கி­ர­மிப்பு முயற்­சி­யின் ஒரு பகு­தி­யா­கவே நாம் கரு­து­கி­றோம். வவு­னியா நக­ர­சபை ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தற்­காக ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னர் நடந்­து­கொண்ட முறை­யைக் கண்­டித்து வெளி­யிட்ட அறிக்­கை­யில் யாழ்ப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­துள்­ளார்.

அந்த அறிக்­கை­யில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,
உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் முடி­வு­க­ளின்­படி வவு­னியா நக­ர­ச­பை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூடு­த­லான ஆச­னங்­க­ளைக் கைப்­பற்­றி­யி­ருந்த போதி­லும் அவை ஆட்­சி­ய­மைப்­ப­தற்­குப் போது­மா­ன­வை­யாக இருக்­க­வில்லை. யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளில் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், வவு­னி­யா­வி­லும் ஆத­ரவு வழங்­கும் என்ற எதிர்­பார்ப்பு இருந்­தது.

ஐ.தே.கவின் ஆட்­டிப்­ப­டைக்­கும் நோக்­கம்
ஆனால், ஐக்­கிய தேசி­யக் கட்சி தங்­க­ளை­வி­டக் குறைந்த ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்ட தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணிக்கு ஆத­ரவு வழங்கி, ஈ.பி.டி.பியின் ஆத­ர­வு­டன் ஆட்சி அதி­கா­ரத்­தில் அவர்­களை அமர்த்­தி­யுள்­ளது. இந்த நட­வ­டிக்­கை­யா­னது பெய­ர­ள­வில் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யி­னரை அதி­கா­ரத்­தில் கொண்டு அவர்­க­ளைத் தங்­கள் பெரும்­பான்மை மூலம் ஆட்­டிப்­ப­டைக்­கும் உள்­நோக்­கம் கொண்­ட­தென்றே நாம் நம்­பு­கி­றோம்.

கடந்த காலத்­தில் வரவு – செல­வுத் திட்­டம், தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் போன்ற விட­யங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தமது ஆத­ரவை கூட்டு அர­சுக்கு உறு­தி­யாக வழங்­கி­யி­ருந்­தது. இந்த ஆத­ர­வா­னது ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கொள்­கை­களை ஏற்­றுக் கொண்டு வழங்­கப்­பட்­ட­தல்ல.

இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண்­ப­தற்கு புதி­தாக உரு­வாக்­கப்­ப­டும் அர­ச­மைப்­பின் மூலம் சில சாத­க­மான வாய்ப்­புக்­களை உரு­வாக்க முடி­யு­மென்ற அடிப்­ப­டை­யில் கூட்டு அர­சின் உறு­தி­தன்­மையை சீர்­கு­லை­யா­மல் பாது­காக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே வழங்­கப்­பட்­ட­தா­கும். அதே நோக்­கத்­துக்­கா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பல விட­யங்­க­ளில் அர­சுக்­குக் கடும் அழுத்­தங்­க­ளைக் கொடுக்­க­வில்லை என்­பதை நாம் மறுக்­க­வில்லை.

பலனை அனு­ப­விக்­கி­றோம்
அதன் கார­ண­மாக கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பெரும் பின்­ன­டை­வைச் சந்­திக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டது. அதன் கார­ண­மாக தமிழ் தேசிய மக்­கள் முன்­னணி, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, ஈ.பி.டி.பி. மட்­டு­மின்றி ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி கூட உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் வடக்­கில் பல ஆச­னங்­களை வெற்­றி­கொள்ள முடிந்­தது.

அந்த வகை­யில் வவு­னியா நகர சபை­யில் அதிக ஆச­னங்­க­ளைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பெற்ற போதி­லும் ஆட்­சி­ய­மைக்­கு­ம­ள­வுக்கு அதி­கா­ரத்­தைப் பெற­மு­டி­ய­வில்லை. இந்த நிலை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டிய தார்­மீ­கக் கடமை ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு உண்டு. ஆனால் அவர்­களோ பல­வீ­ன­மான தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணியை அதி­கா­ரத்­தில் அமர்த்­தி­ய­தன் மூலம் நக­ர­ச­பை­யின் ஆதிக்­கத்­தைத் தங்­கள் கைக்­குள் கொண்டு வந்­துள்­ள­னர்.

குடி­யேற்­றங்­கள்

தமி­ழர் தாய­கத்­தின் எல்­லை­க­ளில் பல்­வேறு சட்­ட­பூர்­வ­மான, சட்­ட­பூர்­வ­மற்ற சிங்­க­ளக் குடி­யேற்­றங்­களை அமைப்­பது, அதன் மூலம் அர­சி­யல் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­று­வது, அந்த அதி­கா­ரத்­தைப் பாவித்து மேலும் குடி­யேற்­றங்­களை விரி­வாக்­கு­வது இந்த வழி­மு­றை­கள் மூலம் அந்­தப் பிர­தே­சங்­களை முழு­மை­யா­கச் சிங்­க­ள­ம­யப்­ப­டுத்­து­வது என்­பது இலங்­கை­யின் ஆட்­சி­யா­ளர்­கள் காலங்­கா­ல­மா­கப் பின்­பற்றி வரும் நய­வஞ்­ச­க­மான தந்­தி­ரோ­பா­ய­மா­கும்.

அந்த நிகழ்ச்சி நிர­லின் ஒரு பகு­தி­யா­கவே ஐக்­கிய தேசி­யக் கட்சி, வவு­னியா நகர சபை­யைத் தனது கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­தள்­ளது. இதற்கு தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, ஈ.பி.டி.பியி­னர் ஆகி­யோ­ரும் துணை­போ­கின்­ற­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தா­கும்.

பல­மாக இருந்தே ஆத­ரவு பெற்­றோம்

அப்­ப­டி­யா­னால் உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் ஆட்­சி­ய­மைக்க தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏனை­யோ­ரின் ஆத­ர­வைப் பெற­வில்­லையா என்ற கேள்வி எழுப்­பப்­ப­ட­லாம்.

நாம் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆத­ர­வைப் பெற்­றோம். வேறு கட்­சி­க­ளின் ஆத­ர­வை­யும் பெற்­றோம். இதில் ஈ.பி.டி.பியின் ஆத­ர­வைப் பெற்­றமை தொடர்­பாக எமக்­குள் கருத்து முரண்­பாடு உண்டு என்­ப­தைச் சக­ல­ரும் அறி­வார்­கள். ஆனால் எவ­ரின் ஆத­ர­வைப் பெற்­ற­போ­தும் நாம் பல­மான நிலை­யில் இருந்து கொண்டு எவ­ரும் எம்மை வழி நடத்­த­மு­டி­யாத நிலை­யி­லேயே இருந்து கொண்டே அதி­கா­ரங்­க­ளைக் கைப்­பற்­றி­னோம் என்­பதே முக்­கி­ய­மான விட­யம்.

கந்­த­ளாய், சேரு­வில, அம்­பாறை, மண­லாறு போன்ற பல பகு­தி­கள் மேற்­கண்ட வழி­மு­றை­கள் மூலம் சிங்­கள மயப்­ப­டத்­தப்­பட்­டன. மேலும் சிங்­க­ள­ம­யம் விரி­வாக்­கப்­ப­டு­கின்­றது என்­பதை நாம் மறந்­து­விட முடி­யாது. வவு­னியா வடக்­கின் நுழை­வா­யி­லான வவு­னியா மாவட்­டத்­தின் பிர­தான நக­ர­மா­கும். இது சிங்­க­ள­ம­யப்­ப­டுத்­தப்­ப­டு­வது எவ்­வ­ளவு பேரா­பத்­தா­னது என்­பதை நாம் புரிந்­து­கொள்ள முடி­யும்.

வவு­னியா மக்­கள் சிங்­க­ள­ம­ய­மாக்­க­லுக்கு எதி­ராக விழிப்­பு­டன் செயற்­பட்டு வரக்­கூ­டிய பேரா­பத்­தைத் தவிர்க்க வேண்­டும். ஏற்­க­னவே சிங்­கள அர­சி­யல் அதி­கா­ரி­கள், சில சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள், எல்­லைக் கிராம ஆக்­கி­ர­மிப்­புக்­கள், இரா­ணு­வ­மு­காம்­கள், பௌத்த விகா­ரை­கள் என்­பன மூலம் சிங்­க­ள­ம­யப்­ப­டுத்­த­லுக்­கான அத்­தி­பா­ரம் அமைக்­கப்­பட்­டது. நக­ர­சபை மூலம் அவற்றை மேலும் முன்­னெ­டுக்­கும் ஆபத்து உண்டு.

தமிழ் மக்­க­ளும், தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளும் பேதங்­களை ஒரு­பு­றம் ஒதுக்­கி­விட்டு இந்த விட­யத்­தில் விழிப்­பு­டன் செயற்­பட வேண்­டு­மெ­னக் கேட்­டுக் கொள்­கின்­றோம் – என்­றுள்­ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி