உலகின் மிகப் பெரிய விமானம்!! அதன் சேவைகள் விரைவில்!!!

உலகின் மிகப் பெரிய விமானம், சில மாதங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது.

'ஸ்ட்ரேட்டோலான்ச்' என்ற பெயர் கொண்ட, இந்த 'மெகா' விமானத்தை உருவாக்கியவர் பால் ஆலென்.

இவர் கம்ப்யூட்டர் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்டை, பில்கேட்சுடன் இணைந்து நிறுவியவர்.

இந்த விமானம் அனைத்து விதங்களிலும், மற்ற விமானங்களில் இருந்து வித்தியாசமானது. இறக்கைகள், கால்பந்து மைதானத்தை விட பெரியது. நீளம் 385 அடி.

இது சாதாரண விமானத்தை போல இருப்பதில்லை. இரண்டு விமானி அறைகள் இருக்கும். 28 சக்கரங்கள், ஆறு இன்ஜின்கள் கொண்டது.

ஒவ்வொரு இன்ஜினும் 4 ஆயிரம் கிலோ எடைமிக்கது. ஒவ்வொரு இன்ஜினும், ஆறு 'போயிங் 747' விமானத்தின் இன்ஜின் திறனுக்கு சமம்.

இது பெரிய விமானம் என்பதால், இதற்கு இரண்டு விமான உடற்பகுதி தேவை. இரண்டிலும் ஒவ்வொரு விமானி அறை இருக்கும்.

வலது பக்கத்தில் உள்ள பகுதியில் தான் விமானி, இணை விமானி, இன்ஜினியர் ஆகியோர் இருப்பார்கள். இவர்கள் தான் விமானத்தை இயக்குவர். இடது புறம் உள்ள விமானி, கண்காணிக்க மட்டுமே செய்வார்.

இதன் எடை 2 லட்சத்து 26 ஆயிரம் கிலோ. இந்த விமானம், 6 லட்சம் கிலோ எடைமிக்க சரக்குகளை. ஏற்றிச் செல்லும் திறன் பெற்றது.

இந்த விமானம் விண்வெளிக்கு, செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து ராக்கெட்டாக பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும் விண்வெளியில் அமைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையங்களுக்கு சரக்குகள் எடுத்துச்செல்லவும் பயன்படும்.

இதன் மூலம் விண்வெளி வீரர்கள், பூமியின் உயரமான சுற்று வட்டபாதைக்கு செல்ல முடியும்.

அமெரிக்காவின் கொலரடோவில் நடந்த, 34வது விண்வெளி கருத்தரங்கில், 'ஸ்ட்ரேட் டோலான்ச்' விமானத்தின் முதல் பயணம், சில மாதங்களில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே விமானத்தின் இரண்டு கட்ட சோதனை பயணம் நிறைவடைந்துள்ளது.

இதில் மணிக்கு 48 கி.மீ., மற்றும் 74 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது. இன்னும் மூன்று கட்ட சோதனை நடத்தப்படவுள்ளது.

2011ல் இதற்கான செலவு ரூ. 2000 கோடி என மதிப்பிடப்பட்டது. தற்போதைய செலவு பற்றிய விபரம் இல்லை.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி