நூதன முறையில் தென்னை மரத்துக்கு மண்டைஓடு!!

திருட்டைத்  தடுக்க நூதன முறையில் தென்னை மரத்துக்கு மண்டைஓடு, எலும்புகள் கட்டி விவசாயி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள கொண்டையப்பட்டியில் முகமது கனி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பிலேயே இவ்வாறு வேடிக்கை நிகழ்த்தப்பட்டுள்ளது.
தனது தோட்டத்தில் அடிக்கடி தேங்காய் திருட்டு இடம்பெற்று வந்ததால்,அதனைத் தடுக்க இவ்வாறு மண்டை ஓட்டைக் கட்டியுள்ளார் விவசாயி.
தென்னந்தோப்பு வழியாக சென்ற பொது மக்கள் தென்னை மரத்தில் கட்டியிருந்த மண்டை ஓடு, எலும்புகளை பார்த்து பயந்து, அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அந்த வழியாக செல்லவே பயப்பட்டனர்.
இதுகுறித்து துவரங்குறிச்சி பொலிஸாருக்கும் தகவல் கொடுத்தனர். தென்னை மரத்தில் மண்டை ஓடு, எலும்புகள் கட்ட கூடாது, உடனே அதை அகற்றுங்கள் என்று பொலிஸார் விவசாயிடம் தெரிவித்தனர்.

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி