வெளிநாட்டு உறவுகள் ஈழத்திற்கு வராமல் போவதன் காரணம் என்ன தெரியுமா ?

அன்றைய காலம் போர்க்காலம். தமது மனதை கல்லாக்கி உடமைகளை துாக்கியேறி்ந்து உணர்வுகளை மண்ணில் புதைத்து உறவுகளை பிரிந்து வெளிநாடு சென்றார்கள் எம்மக்கள்.

சொல்ல முடியாத துன்பங்கள் அணைத்தையும் தாண்டி அநாதையாக நின்ற எம் உறவுகளிற்க்கு ஆயிரம் வசதி வந்தாலும் அவர்களை அகதி என்று கூறி அடக்கி விடுவார்கள் அந்நாட்டு மக்கள்.

தாய்நாட்டை பார்க்க வேண்டும் தாய் மண்ணில் வெறும் காலுடன் நடக்க வேண்டும் என்று எண்ணி தினம் தினம் தமது பொழுதைக்களித்தனர் எமது உறவுகள்.

என்னதான் கனடா , பிரான்ஸ், சுவிஸ்சில் வாழ்ந்தாலும் அவன் சிந்தனை எப்பவும் தாயகத்தில் தான் இருக்கும் .
“ சித்தப்பா உங்க என்ன மழையே ? ”
“ கரண்ட் இரவு இருக்கோ ? ”

“ அமிகாரனால பயம் இல்லையோ ? ”

என்ற கேள்வியை எப்பபார்த்தாலும் கேட்க்கப்படும்.

ஆனால் இன்று போர் முடிந்து தடை நீங்கி தாயகம் பார்க்க ஆயிரம் கனவுகளுடன் ஓடிவந்தால் எம் உறவுகளுக்கு எங்கே நின்மதி. வந்தவர் வீதிக்கு சென்றால் போதும்

“தம்பி வெளி நாடோ கோயிலை கட்டணும் ஒரு இருபது லட்ச்சம் கிடைக்குமே? ”
“ டேய் வெளிநாட்டு மாப்பிளைடா இண்டைக்கு பார்ட்டிதான் ”
“ சனசமூக நிலையம் கட்டனும் காசு கிடைக்குமா ?”

காசு குடுக்காவிட்டால் போதும் தாருமாறாக கதைத்து அவனை அவமானப்படுத்துவது. ஆயிரம் துன்பப்பட்டு தாய்நாடு வந்தவனை கொஞ்சம் நின்மதியாக இருக்க விடலாம் தானே !


வாழ விடுங்கள் எம் உறவுகளை.....


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி