அடுத்த அரச தலை­வரிற்கு தகு­தி­யான நபர் மைத்­தி­ரி­யே!!

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி சார்­பாக அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் முன்­னி­றுத்­து­வ­ தற்கு தகு­தி­யான நபர் தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே என்று விவ­சா­யத்­துறை அமைச்­சர் துமிந்த திசா­நா­யக்க தெரி­வித்­தார்.

உர­மா­னி­யம் வழங்­கல் சம்­பந்­த­மான செய்­தி­யா­ளர் சந்­திப்பு நேற்று இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் வெற்­றிக்­காக கட்­சி­யின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஒரு குடும்­ப­மாக செயற்­பட வேண்­டும். நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின் போது கூறிய பொய்­யான கருத்­துக்­களை மீண்­டும் கூறிக்­கொண்டு சிலர் நாடு முழு­வ­தும் செல்­கின்­ற­னர். அவர்­கள் இவ்­வாறு தொடர்ந்­தும் செயற்­பட்­டால் உண்­மை­யில் என்ன நடந்­தது என்­பதை நாட்­டுக்கு தெளி­வு­ப­டுத்த நேரி­டும்.

அர­சி­லி­ருந்து வில­கி­யுள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை சேர்ந்த 16 பேரைக் காப்­பாற்­றவே சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை சேர்ந்த 23 பேர் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மான வாக்­கெ­டுப்­பில் கலந்து கொள்­ள­வில்லை. சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்­சியை சேர்ந்த சிறிய அணி­யி­னர் அர­சில் கருத்து வேறு­பா­டு­களை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­த­னர்.

அரசை முன்­னெ­டுத்­துச் செல்ல மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மில்லை. அரசு சிறந்த யோச­னை­களை கொண்டு வரும் போது நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு கிடைக்­கும்.

என்னை ஐக்­கிய தேசி­யக் கட்­சியை நோக்கி தள்ள சிலர் முயற்­சித்து வரு­கின்­ற­னர். நானோ, அமைச்­சர் மகிந்த அம­ர­வீ­ரவோ எந்­தச் சந்­தர்ப்­பத்­தி­லும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் இணை­யப் போவ­தில்லை. என் மீது குற்­றம் சுமத்­தும் நபர்­கள் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் அங்­கத்­து­வத்தை பெற்­றுக்­கொண்­ட­வர்­கள் – என்­றார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி