சூது கொண்ட ஓநாய்க் கூட்டம்

 சூது கொண்ட ஓநாய்க் கூட்டம்
_____________________________
சிறு நதியில்
குறுகி விழுந்த விதையில்
குருதி சொறிந்தோடி
விளைந்த வித்துகள்
விழுதுடைந்து உரமிழந்து
இடையோடு பிளந்து கிடக்கின்றோம் என்றெண்ணி நகைத்திடாதே
சீறிவரும் காற்றிலுள்ள
அசைவிடம் கேள்
வீரத்தின் விவேகத்தைக் கூறும்
பேச்சினில் வீரக் கூற்று விற்று
விடியும் நாளென்று நினைத்து
படர்ந்தோரே என் மண்ணை
மிதிக்கும் உன் கால்களை கேள்
மற வீரர் தியாகம் சொல்லும்
படர்ந்திருக்கும் திடக்
கொடிகளை சற்றே உற்றுப்பார்
பூதலத்தின் தரையில்
பூத்த என் உறவுகளின்
உயிர்களை துரோகத்தால்
குளிக்க வைத்த உனக்காக
உடற்றல் கொண்டு காத்திருக்கிறது
மலர் மொட்டென பிறவா எமை
கசக்கி விட்டு கடக்கிறேன் என்று
வைகல் கனவு கண்டிடாதே
நீ கடந்த பாதையை
மீண்டும் மீட்டிப் பார்
கொதிக்கும் ஊதையின்
சக்தியின் வீரியம் தெரியும்
செறுத்தல் செய்து எம்மை
தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டிய
கூர் புத்தி ஓநாய்களே
மௌனமாய் ஓர் நாள்
உறங்கும் நிலையில்
இறக்கும் சூழல் உனை சூழும்
அன்று எங்கள் தேசம்
மீண்டும் விடியும்.....................

வன்னியூர் கிறுக்கன்


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி