அரசியல்மயப்படுத்தும் அரச சேவையை சீர்திருத்த கோரிக்கை!!

அரச சேவையை அரசியல்மயப்படுத்தும் முயற்சிகளை தடுத்து தலையிடுமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அனுப்பியிருந்த கடிதம் ஒன்றை மேற்கோள்காட்டி, பிமல் ரத்நாயக்க, பிரதமருக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அரச சேவையில் இணைந்து கொள்ளும் எதிர்பார்ப்பில் இருக்கும் சிலரை, பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் காலி, உலுவிட்டிகே பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருமாறு அமைச்சர் அபேவர்தன கடிதம் மூலம் அறிவித்திருந்ததாக பிமல் ரத்நாயக்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி