மானிப்­பாயின் சமூக விரோதச் செயல்­கள்!

மானிப்­பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்பட்ட பகு­தி­க­ளில் இடம்­பெற்று வரும் சமூக விரோதச் செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்த பொது­மக்­க­ளை­யும் ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு மானிப்­பாய் பொலி­ஸார் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

மானிப்­பாய் பொலி­ஸார் இது தொடர்­பில் தெரி­வித்­த­தா­வது:
மானிப்­பாய் பொலி­ஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஆனைக்­கோட்டை,சுது­மலை, மானிப்­பாய் நக­ரப்­ப­குதி போன்ற இடங்­க­ளில் அண்­மைக்­கா­ல­மாக சமூ­க­வி­ரோதச் செயல்­கள் தலை தூக்­கி­யுள்­ளன.

பல கொள்­ளைச் சம்­ப­வங்­கள், வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.இவற்றைக் கட்­டுப்­ப­டுத்த நாம் சிறப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளோம்.

குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­கள் தொடர்­பில் மக்­கள் தரும் தகவல்­கள் இர­க­சி­யமாக பேணப்­ப­டும். இந்த விரோத செயல்­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­கள் தொடர்­பான தக­வல்­கள் தெரிந்­தாலோ அல்­லது குற்­றச் செயல்­களைக் கண் டாலோ உட­ன­டி­யாக பொலி­ஸா­ருக்கு தெரி­யப்­ப­டுத்­து­மாறு பொலி­ஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதே­வேளை மானிப்­பாய் பகு­தி­யில் தொடர்ச்­சி­யாக வீடு­க­ளில் கொள்­ளைச் சம்­ப­வங்­கள் மற்­றும் சமூக விரோதச் செயல்­கள் இடம்­பெற்று வரும் நிலை­யில் இது­வரை எவரும் கைது செய்­ய­வில்லை என்­றும் குற்­றத்தை கட்­டுப்­ப­டுத்த ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கையை எடுக்­க­வில்லை என­வும் அப்­ப­குதி மக்­க­ளால் குற்­றம் சுமத்­தப்­பட்டு வரு­கின்­ற­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி