சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய திட்டமொன்று உருவாக்கம்!

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக பல தரப்பினரின் பங்களிப்புடன் புதிய திட்டமொன்று உருவாக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்து நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பொலிஸ் திணைக்களம், பிரதேச செயலகம், சுற்றுலா அபிவிருத்திச் சபை, தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்டவற்றின் பங்களிப்புடன் இந்த புதியத் திட்டம் உருவாக்கப்படும்.

மிரிஸ்ஸ மற்றும் மெதிகம பிரதேசத்தில் அண்மையில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி