அரசியல் கைதியின் விடுதலையை வலியுறுத்தி உணவு ஒறுப்புப் போராட்டம்!!!

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் உணவு ஒறுப்புப்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி மனோகரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சுசிகலா அருள்தாஸ் உள்ளிட்டோர் இந்த உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி