பத்மாவத் ஹீரோ, வில்லனுக்கு சிறந்த நடிகருக்கான தாதாசாகேப் பால்கே விருது

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் - ஷாகித் கபூர் நடிப்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியான படம் `பத்மாவத்'. வடஇந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பால் படம் அங்கு ரிலீசாகவில்லை. அரியானா, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்த படம் முதல் 4 நாட்களில் ரூ.100 கோடியை வசூல் செய்து புதிய மைல்கல்லை தொட்டது.

இந்த படம் முதல் நாளில் ரூ.19 கோடியும், அடுத்தடுத்த நாட்களில் 32 கோடி, 27 கோடி, 31 கோடி என மொத்தமாக ரூ. 114 கோடிகளை வசூல் செய்து ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. ரூ.100 கோடி என்ற மைல்கல்லை தொட்ட தீபிகாவின் 7-வது படம் `பத்மாவத்' ஆகும். இந்த படம் ஒரு மாதத்தில் ரூ.585 கோடி வசூல் செய்தது.இந்நிலையில், பத்மாவத் படத்தில் கதாநாயகனாக நடித்த ஷாகித் கபூர் மற்றும் வில்லன் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. வில்லனாக நடித்த ரன்வீர் சிங்கிற்கு சிறந்த நடிகருக்கான விருதும், ஹீரோவாக நடித்த ஷாகித் கபூருக்கு முன்னணிப் பாத்திரத்தில் மறக்கமுடியாத நடிகர் (ஆண்) விருதும் வழங்கப்பட்டது.Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி