அமெரிக்காவுடனான உறவு முன்னேறி இருப்பதாக சுவிஸ்ஸின் நிதி அமைச்சர் கருத்து!

அமெரிக்காவுடனான தங்கள் உறவு தெளிவாக முன்னேறி இருப்பதாக சுவிஸ்ஸின் நிதி அமைச்சர் Ueli Maurer கூறியுள்ளார்.

ஏப்ரல் 20 முதல் 22 வரை வாஷிங்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக் குழுவின் வசந்தகால சந்திப்பிற்காக சுவிஸ் நிதி அமைச்சர் maurer சென்றுள்ளார்.

இந்நிலையில் பொது வானொலி ஒன்றிற்கு பேட்டி அளித்த maurer அமெரிக்காவிற்கும் சுவிஸ்ஸிற்கும் இடையேயான உறவு மேம்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஒபாமா அரசு இருந்த போது வரி விதிப்பு மற்றும் சுவிஸ் வங்கிகளுக்கு எதிரான அபராதங்கள் போன்றவை அமலில் இருந்தன. ஆனால் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தால் சுவிட்சர்லாந்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மற்றும் மேம்பட்ட தொடர்புகள் சாத்தியமாகி இருப்பதாக தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் ஏற்றுமதி பொருளாதாரம், அமெரிக்காவின் இறக்குமதியில் உள்ள பாதுகாப்பு விதிகளினால் ஏற்படும் அழுத்தங்களை சமாளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மற்ற நாடுகளை விட சுவிஸ் குறைவாகத்தான் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இருப்பினும் தற்போது தான் வர்த்தகத்தைப் பற்றி மட்டும் குறிப்பிடுவதாகவும், ஆனால் இந்த பாதுகாப்பு விதிகள் சேவைகளுக்கும் பொருந்துகிறது. இதனால் ஐரோப்பிய சந்தையில் சுவிசிற்க்கு எந்த பரிவர்த்தனையும் இல்லாதது தனக்கு வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் சுவிட்சர்லாந்து ஒரு சிறிய பொருளாதாரம் கொண்ட நாடு , ஆகவே பெரிய நாடுகளுடன் நல்ல தொடர்பு கொண்டிருப்பது முக்கியம் என்பதால் தனிப்பட்ட தொடர்புகளை வளர்த்துக் கொள்வதில் தான் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி