மருதனார்மடம் சந்தையை தரப்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தையின் கள நிலவரங்களை வலி.தெற்கு பிரதேச சபையினர் இன்று நேரில் சென்று ஆராய்ந்தனர்.

பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன் தலைமையிலான குழுவினர் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற வியாபரிகளுடனும், நுகர்வோருடனும் சந்தையின் மேம்பாடு தொடர்பாக கலந்துரையாடினர்.

குடாநாட்டில் நவீன வசதிகளுடன் கூடிய அதிக வருமானம் ஈட்டுகின்ற முதல்தர சந்தையாக மருதனார்மடம் பொதுச் சந்தையைாக மாற்றியமைப்பது குறித்துக் கலந்தாலோசித்தனர்.

சந்தையில் கிணறு, மலசலகூடம் மற்றும் திண்மக்கழிவகற்றல் போன்றன உடனடியாக தேவைக் உடன் நிவர்த்தி செய்யப்படும் என்று வியாபாரிகளுக்கு அவர்கள் உறுதியளித்தனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி