மாகாண சபைத் தேர்தலை பிற்போட வேண்டாம் - நஸீர் அஹமட்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கற்றுக் கொண்ட பாடத்தை அரசு மறந்தால் மேலும் இழப்புக்களை சந்திக்க வேண்டி வரும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக விழுமியங்களுக்கு அரசு மதிப்பளித்து மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த நல்லாட்சி அரசை ஜனாதிபதி பொறுப்பெடுத்துக் கொண்டதும் அவரது 100 நாள் வேலைத் திட்டத்தினூடாக ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கப்படும் என பெருத்த எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.

ஆனால், அவ்வாறான எதிர்பார்ப்புக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாதது ஒருபுறமிருக்க ஏற்கெனவே இருந்து வந்த ஜனநாயக முறைமைகள் கூட மங்கி மறையும் அளவுக்கு காட்சிகள் அரங்கேறின.

மக்களின் தீர்ப்புக்கும் ஜனநாயகப் பண்புகளுக்கு மதிப்பளிக்காது நடந்து கொண்டால் மக்கள் என்ன பிரதிபலிப்பை வெளியிடுவார்கள் என்பதை கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அரசுக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளன.

எனவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இழுத்தடித்ததைப் போன்று மாகாண சபைத் தேர்தலையும் அரசு பிற்போட நினைத்தால் மக்கள் அதற்கும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி