ஜேர்மனியில் உள்ள யூத நிறுவனங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு தேவை!!

ஜேர்மனியில் உள்ள யூத நிறுவனங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஏஞ்சலா மெர்கல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் இஸ்ரேலிய செய்தி தாள் ஒன்றுக்கு கடந்த சனிக்கிழமையன்று பிரத்தேக பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில் பேசிய அவர், அகதிகளின் மறுபிரவேசம் மூலம் ஜெர்மனியில் உள்ள யூத இனமான செமித்திக் இன மக்கள் பாதிக்கப்படலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பெடரல் ரிபப்லியில் யூத இனமான செமித்திக் இன வெறுப்பு நடவடிக்கைகளை ஒழிப்பதில் தான் தோல்வியுற்றதன் மூலம் "தன் சுமை அதிகரித்துள்ளது " என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

அகதிகள் வருகை மற்றும் அரபு பாரம்பரியம் சார்ந்தவர்கள் இரண்டையும் தொடர்புபடுத்திய மெர்கல் 2018ல் ஜேர்மனியில் உள்ள யூதர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு தேவைப்பட்டது தனக்கு சங்கடமாக இருப்பதாகவும், அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இறுதியாக அவர் பேசுகையில் இதில் வருத்தத்திற்குரிய இன்னொரு உண்மை என்னவென்றால் அகதிகள் வருகை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே இந்த இன வெறுப்பு ஜெர்மனியில் நடந்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி