G.S.P வரிச் சலுகை எதிர் வ­ரும் 22ஆம் திகதி முதல் நடை­மு­றையில்!!

இலங்­கை­யின் ஏற்­று­ம­திப் பொருள்­க­ளுக்கு அமெ­ரிக்­கா­வால் வழங்­கப்­ப­டு­கின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர் வ­ரும் 22ஆம் திகதி முதல் நடை­மு­றைக்கு வரும் எனக் கைத்­தொ­ழில் மற்­றும் வர்த்­தக துறை அமைச்­சர் ரிசாட் பதி­யு­தீன் தெரி­வித்­தார்.

இலங்கை உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு ஜி.எஸ்.பி வரிச் சலு­கையை 2020ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 31 ஆம் திகதி வரை­யில் நீடிக்­கும் ஒப்­பந்­தத்­தில் அமெ­ரிக்க அரச தலை­வர் டொனால்ட் டிரம்ப் அண்­மை­யில் கையொப்­ப­மிட்­டி­ருந்­தார். இந்த வரிச் சலுகை எதிர்­வ­ரும் 22ஆம் திகதி முதல் நடை­மு­றைக்கு வர­வுள்­ளது.

ஐக்­கிய அமெ­ரிக்­கா­வின் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­த­லுக்­கான பொது­மைப்­ப­டுத்­தப்­பட்ட திட்­டம் (ஜி.எஸ்.பி) 2017ஆம் ஆண்டு டிசெம்­பர் 31ஆம் திக­தி­யு­டன் காலா­வ­தி­யா­கிய நிலை­யில் அதன் மீள் அனு­ம­தியை அமெ­ரிக்க காங்­கி­ரஸ் வழங்­க­வில்லை.

எவ்­வா­றா­யி­னும் மீண்­டும் அந்த வரிச் சலு­கையை அமெ­ரிக்க அரச தலை­வர் வழங்­கி­யுள்­ளார் – என்று ரிசாட் குறிப்­பிட்­டார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி