வடக்கில் 229 பாலங்­களிற்கு நடவடிக்கை!!

2016ஆம் ஆண்­டில் வடக்கு மாகாண சபைக்கு 3 ஆண்­டுத் திட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட 87 பாலங்­க­ளும் அமைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் தற்­போது இனம்­கா­ணப்­பட்ட மேலும் 229 பாலங்­களை அமைப்­ப­தற்­கான அனு­ம­தி­கள் கோரப்­பட்­டுள்­ளன என்று வடக்கு மாகாண தலைமைச் செய­லா­ளர் அ.பத்­தி­நா­தன் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகா­ணத்­தில் உள்ள உள்­ளூர் கிரா­மிய வீதி­க­ளில் காணப்­ப­டும் அதிக பாலங்­கள் போருக்­குப் பின்­னர் சீர­ மைக்­கப்­ப­டாத நிலை­யில் உள்ளன. உட­ன­டி­யாக அமைக்­கப்­பட வேண்­டிய பாலங்­கள் தொடர்­பில் 2015ஆம் ஆண்­டில் 149 பாலங்­கள் தொடர்­பில் மாகாண சபை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி அமைச்­சின் ஊடாகக் கோரிக்கை விடுத்­தி­ருந்தோம்.

இவ்­வாறு தேர்வு செய்­யப்­பட்ட பாலங்­க­ளில் மக்­க­ளின் போக்­கு­வ­ரத்து தூரம், மழை காலப் பாதிப்­புக்­கள், உயிர் அச்­சம் என்­ப­னவே முதன்­மைப்­ப­டுத்­தப்­பட்­டன.  எம்­மால் முன்­வைக்­கப்­பட்ட 149 பாலங்­க­ளில் 87 பாலங்­கள் அனு­ம­திக்­கப்­பட்டு 3 ஆண்­டு­க­ளுக்­கும் பகிர்ந்து வழங்­கப்­பட்டு வந்­தன.

இதன் கீழ் குறித்த திட்­டத்­தில் இது­வரை 79 பாலங்­க­ளின் பணி­கள் முழுமை பெற்­றுள்­ள­தோடு ஏனைய 8 பாலங்­க­ளி­னது பணி­க­ளும் தற்­போது இடம்­பெ­றும் நிலை­யில் அவை­யும் எதிர்­வ­ரும் ஜூலை மாதத்துக்கு முன்­னர் முழுமை பெறும் என நம்­பு­கின்­றோம்.

குறித்த பாலங்­க­ளில் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 33 பாலங்­க­ளும், மன்­னார் மாவட்­டத்­தில் 18 பாலங்­க­ளும், வவு­னியா மாவட்­டத்­தில் 17 பாலங்­க­ளும் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 15 பாலங்­க­ளும் யாழ்ப்­பா­ணத்­தில் 4 பாலங்­க­ளும் என 87 பாலங்­கள் அமைக்­கப்­பட்­டன.

இவற்றில் 12 மீற்­றர் முதல் 30 மீற்­றர் நீளம் வரை­யான பாலங்­க­ளும் உள்­ள­டங்­கு­கின்­றன. இதே­நே­ரம் அடுத்த 3 ஆண்­டுத் திட்­டத் துக்­காகப் புதி­தாக இனம் காணப்­பட்ட பாலங்­க­ளின் விவ­ரங்­கள் தற்­போது மாவட்ட ரீதி­யில் தொகுக்­கப்­பட்டு மாகாண சபை­யில் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இதில் மொத்­தம் 229 பாலங்­கள் அடங்­கு­கின்­றன.

2015ஆம் ஆண்­டுத் திட்ட முன்­மொ­ழி­வினை கைய­ளித்த காலத்­தினை விட­வும் இம்­முறை முன்­கூட்­டியே கைய­ளித்­துள்­ள­மை­யால் அதிக பாலங்­கள் கிடைப்­ப­தற்கு சந்­தர்ப்­பம் உள்­ளது என எதிர் பார்க்­கின்­றோம்- –என்­றார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி