வடக்கு,கிழக்கில் 522 ஏக்கர் காணி விடுவிக்க நடவடிக்கை!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இலங்கை இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது எனத் தெரியவருகிறது.

அதனடிப்படையில், போரால் பாதிக்கப்பட்ட தனியார் இடங்களை விடுவிக்கும் போது அவற்றில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் வேறு இடத்தில் மீள அமைக்கப்படவுள்ளன.

அவற்றை அமைப்பதற்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள 866.71 மில்லியன் ரூபாவை இலங்கை இராணுவத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி