சமுர்த்தி வங்­கி­யில் 675 கோடி ரூபா மோசடி!!

சமுர்த்தி வங்­கி­யில் 675 கோடி ரூபா மோசடி இடம்­பெற்­றுள்­ளது என்று தலைமை அமைச்­சர் அறி­வித்­துள்­ளமை படு­ப­யங்­க­ர­மான குற்­றச்­சாட்­டா­கும் என்று தெரி­வித்த முன்­னாள் சமுர்த்தி விவ­கார அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக்க, இது தொடர்­பில் சபைக்­கு ரணில் தெளி­வு­ப­டுத்­த­வேண்­டும் என­வும் வலி­யு­றுத்­தி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று சிறப்­புக் கூற்­றொன்றை விடுத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

‘ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மே தினக் கூட்­டத்­தில் உரை­யாற்­றிய தலைமை அமைச் சர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க, சமுர்த்தி வங்­கி­யில் 675 கோடி ரூபா மாய­மா­கி­யுள்­ளது எனக் குற்­றஞ்­சாட்­டி­யுள் ளார்.

675 கோடி அல்ல 0.75 சத­வீத கோடி மோசடி இடம்­பெற்­றி­ருந்­தால்­கூட அது தொடர்­பில் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டும். சமுர்த்தி அமைச்­ச­ராக நானே பதவி வகித்­தேன். பொறுப்­பேற்­ப­தற்­கும் நான் தயா­ரா­கவே இருக்­கின்­றேன் -– என்­றார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி