தொடருந்துடன் மோதி பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!!

சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து கட்டுநாயக்க, 18 ஆம் கட்டை தொடருந்துக் கடவையில் இன்று காலை நடந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் நீர்கொழும்பு மருத்துவமனையில் சேர்்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க வானூர்தி நிலைய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பண்டாரகம பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி