தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!!

தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு ஜேர்மனியில் 3 ஆவது நாளாகவும் கவனவீர்ப்புப் பேரணி நேற்று நடைபெற்றது.

மன்சார் நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடிய வீதிகளில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தலும், ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு பேரவலத்தை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பிராங்போர்ட் நகரத்தில் அமைதி நாடகம் இடம்பெற்றது.

இன்று டோர்ட்முண்ட் நகரிலும், ஈசென் நகரிலும் கவனவீர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி