சீனா வழங்கிவரும் கடன் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இரகசிய அறிக்கை!!

சர்வதேச நாடுகளுக்கு சீனா வழங்கிவரும் நூற்றுக்கணக்கான பில்லியன் கடன் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இரகசிய அறிக்கை ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

த ஒஸ்ட்ரேலியன் ஃப்னான்ஸ் ரிவீவ் (The Australian Financial Review) ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைகளை 'கடன் புத்தக இராஜதந்திரம்' என அமெரிக்க தெரிவித்துள்ளது.

இந்த கடன் வழங்கல் மூலமாக பிராந்தியத்தில் சீனா தமது இராணுவ பலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, கடன்களை வழங்கி சீனா தமது கடன் புத்தக இராஜதந்திரத்தை மேற்கொண்டு வரும் இலங்கை உட்பட 16 நாடுகளை அமெரிக்க அறிக்கை அடையாளப்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, டோங்கோ, மிக்ரோனேசிய முதலான நாடுகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சீனா 8 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கியுள்ளது. மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டமை என்பனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானில் கவுதார் துறைமுகம் உட்பட 62 பில்லின் அமெரிக்க டொலர் முதலீட்டை சீனா மேற்கொண்டுள்ளது.

இவ்வாறான பொருளாதார மூலோபாயத்தின் ஊடாக, பிராந்தியத்தில் சீனா தமது இலக்குகளை அடைய முயற்சிப்பதாகவும், இது தொடர்பில் பாதுகாப்பு ரீதியாக அமெரிக்கா கரிசனையை கொண்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி