கட்சி விட்டு கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கை!

அரசியல் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தும் போது நீதிமன்றத்தின் ஊடாக அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் அதிகாரம் 20 வது திருத்தச்சட்டத்தின் மூலம் இல்லாதொழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி ஒன்றின் யாப்புக்கு அமைய அந்த கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் போது, அதற்கு எதிராக இடைக்கால தடையோ, தடையுத்தரவோ பிறப்பிக்கப்படும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இருக்கக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 20 வது திருத்தச்சட்டம் தொடர்பான யோசனையில் கூறப்பட்டுள்ளது.

மக்களின் வாக்குகள் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தான் விரும்பியவாறு கட்சி மாற முடியாது.

அப்படி கட்சி மாறும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அவர் சார்ந்த கட்சியின் யாப்புக்கு அமைய நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி