ஈரானுக்கு விஜயம் செய்யும் மைத்திரிபால சிறிசேன!

ஈரானுடன் அணு உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டு, ஈரான் மீதான தடைகளை விதிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கை சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஈரானுக்கு விஜயம் செய்யும் முதலாவது வெளிநாட்டுத் தலைவரின் விஜயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பயணம் அமைந்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் ஈரானுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

ஈரான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கையை அடுத்து, இலங்கையில் கனிய எண்ணெய் இறக்குமதி மற்றும் அது சார்ந்த உற்பத்திகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் விசேட அழைப்பையேற்று ஈரான் செல்லும் ஜனாதிபதி, இலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் இலங்கையில் ஈரானின் முதலீடுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தவுள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது ஈரான் தொடர்பான அமெரிக்க மற்றும் சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி