அஞ்­சல் மாதத்­தை­யொட்டி முத்­திரை கண்­காட்­சி!

அஞ்­சல் மாதத்­தை­யொட்டி சாவ­கச்­சேரி அஞ்சல் அலு­வ­ல­கத்­தி­னர் சாவ­கச்­சேரி அஞ்­ச­ல­கப் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் உள்ள பாட­சா­லை­க­ளில் முத்­திரை தொடர்­பான கண்­காட்­சியை நடத்தி மாண­வர்­க­ளுக்கு முத்­தி­ரைப் பயன்­பாடு தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லா­ரி­யின் கற்­றல் வள நிலை­யத்­தில் நேற்று முத்­தி­ரைக் கண்­காட்­சி­யை நடத்­தி­னர்.சாவ­கச்­சேரி அஞ்­சல் அதி­பர் லம்­பேர்ட் இன்­ப­ராஜ் தலை­மை­யில் நடை­பெற்ற கண்­காட்­சியை கல்­லூரி அதி­பர் ந.சர்­வேஸ்­வ­ரன் திறந்து வைத்­தார்.

பெரு­ம­ளவு மாண­வர்­கள் முத்­தி­ரை­களைப் பார்­வை­யிட்­ட­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த வாரம் சாவ­கச்­சேரி மக­ளிர் கல்­லூ­ரி­யில் முத்­தி­ரைக் கண்­காட்சி இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி