பன்குடாவெளியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க ஏற்பாடு!!

தமிழின அழிப்பு நாளான மே 18ஆம் திகதி நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு, பன்குடாவெளியிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செல்லம் குழுமத் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.

நாளைமறு தினம் காலை 9 மணிளவில் இரத்ததானமும், 12 மணிளவில் அன்னதானமும், மாலை 5 மணியளவில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட பூஜை வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பன்குடாவெளி ஆற்றங்கரை முற்றத்தில் மாலை 6.30 மணிக்கு உணர்வு பூர்வமாக ஆயிரம் சுடர்கள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி