வவுனியாவில் இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கான ஆத்ம சாந்தி பூஜையும் , நெய்தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வும் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு நாளை காலை 7.30 மணிளயவில் குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் தமிழ் விருட்சம் அமைப்பினர் மற்றும் ஆலய பரிபாலன சபை ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் அனைவரும் எம் உறவுகளுக்காய் பிரார்த்திக்க வருமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நாளையதினம் மாலை 5.30மணியளவில் வவுனியா நகரசபைக்கு முன்பாக அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியிலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது என தெரியவந்துள்ளது.

வவுனியா நகரசபை வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் பொங்குதமிழ் நினைவுத்தூபி நீண்டகாலமாக பராமரிப்பற்று காணப்பட்ட நிலையில் புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பிலும், வவுனியா சமூக ஆர்வலர்களின் ஆதரவுடனும் நினைவுத்தூபி தற்போது நகரசபைத் தலைவர் இ.கௌதமனின் வேண்டுகோளுக்கிணங்க புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி