பெண்கள் தலைமையிலான திருட்டு கும்பல் கைது!!!

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கும்பல் ஒன்றினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதியப்பட்டிருந்தன.

இதற்கமைய குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று நடத்திய சோதனை நடவடிக்கையின் போது கரைச்சி குடியிருப்பு பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதாகிய சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருட்டு கும்பல் ஒன்று செயற்பட்டுக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் பொலிஸ் அணியினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த போது முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மோட்டர் சைக்கிள்களின் பாகங்கள் மற்றும் இலக்கத்தகடுகளுடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைதாகியுள்ளனர்.

இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டு வரும் கும்பல் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு பொலீஸார் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி