பிரதமரை சந்தித்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்!!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இலங்கைக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ள அவர், அலரி மாளிகையில் இன்று பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தும், குறிப்பாக, தெற்காசியப் பிராந்திய விவகாரம் மற்றும் பொருளாதார கேந்திரமாக அது வளர்ச்சி பெற்று வருவது குறித்தும் இருவரும் ஆராய்ந்தனர்.

இந்தச் சந்திப்பில் இந்திய இராணுவத் தளபதியுடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் கலந்து கொண்டார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி