முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தை காரைதீவில் துக்கதினமாக அனுஸ்டிக்குமாறு வேண்டுகோள்!

முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தை காரைதீவில் துக்கதினமாக அனுஸ்டிக்குமாறு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிக்கையில்,

மே 18 திகதி காரைதீவில் பாலையடி பிள்ளையார் கோயில் வீதியில் அமைந்துள்ள பல்தேவைக் கட்டடத்தில் பிற்பகல் 4 மணியளவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தின நிகழ்வொன்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் எம் உறவுகளை இனச்சுத்திகரிப்பு செய்து இனப்படுகொலையாக அழிக்கப்பட்ட அந்த நாளை தமிழ் உறவுகள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள்.

தமிழரின் துக்கதினமான அந் நாளை இவ் வருடமும் காரைதீவு மட்டுமன்றி கிழக்குமாகாண தமிழ் அனைத்து உறவுகளும் அனுஸ்டிப்போம் என தாழ்வாக வேண்டுகிறேன்.

வடக்கு மாகாணத்தில் முள்ளி வாய்க்கால் இனப்படுகொலையான மே18ம் திகதி தமிழின அழிப்பு தினமாகவும் தமிழ்த் தேசிய துக்கதினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது

கிழக்கில் தமிழ் கிராமங்களிலுள்ள பொதுஅமைப்புக்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்களிடம் சமயம் சார்ந்த அமைப்புக்கள் ஒன்றிணைந்தால் மே 18ம் தினமன்று தமிழரின் துக்க தினமாக அனுஸ்டித்து தமிழரின் இனப்படுகொலையை நினைவு கூரலாம். வாகரையில் நினைதூபியிலும் அனுஷ்டிக்கவுள்ளனர்.

அனைத்து தமிழ்பிரதேசங்களிலும் தமிழனின் இனப்படுகொலையை துக்கதினமாக அனுஷ்டிக்க வேண்டுமென்பது எனது அவா. முடிந்தவரை செயற்படுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிகழ்வில் பங்கேற்குமாறு அனைத்து பொது அமைப்புக்களையும், விளையாட்டுக்கழகங்களையும், அனைத்து சமயம்சார்ந்த அமைப்புக்களையும், இளைஞர்கள் , யுவதிகள் அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி