பல்கலை மாணவர்களை சந்தித்த முதலமைச்சர்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் வட மாகாண முதலமைச்சருக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற உள்ளது.

முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக அறியமுடிகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தம்முடன் இணைந்து நடத்துமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கின் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கமைய, வட மாகாண சபையினரையும் தம்முடன் இணைந்து நினைவேந்தலை நடத்துமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் அவர்கள் அண்மையில் கோரியிருந்தனர்.

எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த முதலமைச்சர், வட மாகாண சபையினால் முன்னெடுக்கப்படும் நினைவேந்தலில் பங்கேற்குமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

எனினும், அதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்க மறுத்ததால், நினைவேந்தல் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கமற்ற நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலையில், அது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்கில் இன்று மாலை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி