பத்திரிகை அன்பர்களின் மனது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் - ரஜினிகாந்த் ட்வீட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பவர்களை சந்தித்து விட்டு நேற்று சென்னை திரும்பியபோது ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது, சில கேள்விகளுக்கு ஆவேசத்துடன் பதிலளித்த அவர் “ஏய் வேறு ஏதாவது கேள்வி இருக்கா?” என கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த பத்திரிகை சங்கம் ஒன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. இதனை அடுத்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளதாவது, “விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Add caption

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி