ஈரானில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து பேசியுள்ள மைத்திரி!!

இரண்டு நாள் விஜயமாக ஈரான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து பேசியுள்ளார்.

ஈரானின் டெஹரான் நகரில் வசிக்கும் இலங்கையர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இச்சந்திப்பில் கல்விமான்கள், தொழிற்துறை நிபுணர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளித்தனர்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த பின்னர் இன்று பிற்பகல் நாடுதிரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி