பாகிஸ்தான் பிரஜைக்கு மரண தண்டனை விதித்துள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்!!

இலங்கைக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கு தொகை கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டியில் 8.35 கிலோ கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த மரண தண்டனை தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளை கிழங்கு தொகையுடன் மறைத்து குற்றவாளி இந்த ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்துள்ளார். சைட் மொஹமட் என்ற இந்த குற்றவாளிக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்திருந்தார்.

நீண்ட விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி