விசேட அதிரடிப்படையினரின் தாக்குதலுக்கு இலக்கான இருவர்!!

பொகவந்தலாவ - லொயினோன் தோட்டத்தைச் சேர்ந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடி படையினர், பாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்களால் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகிய இருவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக இன்று டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக பொகவந்தலாவ மானெளி வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்கள் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையிலே நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி