கொழும்பில் நவீனமயப்படுத்தும் ரயில் பயணங்கள்!

பொது போக்குவரத்து சேவையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கொழும்பில் ரயில் பயணங்கள் நவீனமயமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களை இணைக்கும் ததாசன்ன ரயில் கட்டமைப்பினை அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக ரயில்வே திறனை அதிகரிப்பதற்காக அனுமதி பத்திரம் மற்றும் ஆசனங்களை முன்கூட்டியே ஒதுக்கி கொள்வதற்கு நவீன கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

பயணிகளுக்கு தொலைதொடர்பு சேவைகள் (WiFi உட்பட) வழங்குவதற்காக நவீன கட்டமைப்பு, ரயில் நிர்வாகம் மற்றும் செயற்பாட்டு மையம் நிர்மாணித்தல் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி