பணிப்புறக்கணிப்பில் ரயில்வே ஊழியர்கள்!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் 48 மணிநேர அடையாள ​வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த அடையாள வேலை நிறுத்தத்தின் காரணமாக, ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே தொழிநுட்ப சேவை தொழிற்சங்கக் குழுத் தலைவர் சம்பத் ராஜித தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரயில்வே ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்த போராட்டத்தினால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி