போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் குழுவொன்று கைது!!

மட்டக்குளியில் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குழுவொன்றை பொலிஸார் கைதுசெய்தனர்.

இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்குளி சமித்புரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சுற்றிவளைப்பின் போதே பாதாள கும்பலுடன் போதைப்பொருள் விற்பனையாளர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தத் தேடுதல் நடவடிக்கையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் இதன் போது இராணுவ சீருடையொன்றும் கைப்பற்றப்பட்டது எனவும் கூறப்பட்டது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி