அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் பிழைகளை சுட்டிக்காட்டும் கூட்டமைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் பல்வேறு பிழைகள் காரணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொள்கை பிரகடன உரை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் இன்று இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஜனாதிபதியால் கூறப்பட்ட அளவுக்கு வடக்கு கிழக்கில் காணிகள் விடுவிக்கப்படவில்லை. அத்துடன் அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி தமது உரையில் எதனையும் தெளிவாக கூறவில்லை.

அரசியல் தீர்வு விடயத்தில் இருந்து ஜனாதிபதி விலகி இருக்க முடியாது. மக்களால் வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையில், ஜனாதிபதி செயற்படவேண்டும்.

அவ்வாறு அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்காவிட்டால், உரிய அழுத்தங்களை தாங்கள் வழங்குவோம்” என்றும் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.



Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி