வடக்கின் புதிய வீதிகளுக்கு விடுதலைப் புலிகள் பெயர்!!!

வடக்கில் அமைக்கப்படும் புதிய வீதிகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் பெயர் சூட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், அவற்றில் எவ்வித உண்மையும் கிடையாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அதேபோன்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அரசியல் இலாபம் கருதி சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே, அவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி