எரிபொருள் விலை மாற்றத்தினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

இலங்கை அரசாங்கத்தினால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் பேருந்து கட்டணம் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நூற்றுக்கு 15 வீதத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என, அனைத்து இலங்கை பேருந்து சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரிய்ஜித் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கவில்லை என்றால் அனைத்து பேருந்து சங்கத்தினரும் இணைந்து தொடர் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

எரிபொருள் விலையை உயர்ந்த மட்டத்தில் அதிகரித்தமையால் போக்குவரத்து துறைக்கு மிகவும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அதிகரத்திற்கு வந்த நாளில் இருந்து பொது போக்குவரத்தின் நலனுக்காக ஒன்றும் செய்யவில்லை என அஞ்ஜன பிரியக்ஜித் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக முச்சக்கரவண்டிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய முதலாவது கிலோ மீற்றருக்கு 50 ரூபாயில் காணப்பட்ட கட்டணம் நாளை முதல் 60 ரூபாவாக அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்துக்கான செலவுகளும் அதிகரிக்கவுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி