இலங்கையில் சிகரெட் உற்பத்தியில் வீழ்ச்சி!!

2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டில் சிகரெட்டின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டாக்டர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

2016ஆம் ஆண்டில் சிகரெட்டின் உற்பத்தி 4300 மில்லியனாக காணப்பட்ட நிலையில் 2017ஆம் ஆண்டில் அது 3700 மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த திடீர் வீழ்ச்சியில் புகைப்பிடித்தலை குறைப்பதற்கு கடந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளும் தாக்கம் செலுத்துகின்றன.

அந்த வகையில் இம்முறையும் புகையிலை பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி