மண்ணெண்ணெய் நிவாரணத்தை தொடர்ந்தும் வழங்க இணக்கம் தெரிவித்துள்ள அரசாங்கம்!!

மண்ணெண்ணெய் நிவாரணத்தை தொடர்ந்தும் வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் குறைந்த வருமானம் பெறுகின்ற, மின்சார வசதியில்லாத குடும்பங்களுக்கும், மண்ணெண்ணெயைப் பயன்படுத்தும் படகு உரிமையாளர்களுக்கும் தொடர்ந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிவாரணத் தொகையை பயனாளிகளின் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் பற்றிய தகவல்கள் சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் திணைக்களங்களில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும்.

இதற்கமைய, மண்ணெண்ணெய் விலை அதிகரித்த நாள் தொடக்கம் அமுலாகும் வகையில் உரிய நிவாரணத்தை நிலுவைக் கொடுப்பனவுகளுடன் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி