டோனிக்கு அடுத்து விக்கெட் கீப்பர் யார்???

2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு பிறகு டோனி ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவரது விக்கெட் கீப்பர் பணியை யார் தொடருவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மகேந்திர சிங் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக உள்ளார். 2019ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு பிறகு, டோனி அணியில் நீடிப்பாரா? அல்லது ஓய்வு பெறுவாரா? என்கிற கேள்வி கிரிக்கெட் உலகில் நிலவுகிறது.

எனினும், அவர் அதிகபட்சம் ஓர் ஆண்டு தான் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டோனி ஓய்வு பெற்ற பின்னர் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பராக யார் செயல்படுவார் என்பதில் போட்டி நிலவுகிறது.

தற்போது ஐ.பி.எல் தொடரில் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷண் ஆகிய விக்கெட் கீப்பர்கள் சிறப்பான ஆட்டத்தை கீப்பிங்கிலும், துடுப்பாட்டத்திலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவர்களில் தினேஷ் கார்த்திக் மூத்த வீரராக இருந்தாலும், தற்போதைய ஐ.பி.எல் தொடரில் 321 ஓட்டங்கள் குவித்துள்ளார். இளம் வீரரான சஞ்சு சாம்சன் 332 ஓட்டங்களும், ரிஷப் பண்ட் 393 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.

மேலும், இஷான் கிஷண் நேற்றைய போட்டியில் 21 பந்துகளில் 62 ஓட்டங்கள் விளாசி மும்பை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தார்.

எனவே, இவர்களில் ஒருவரை தேர்வுக்குழு டோனிக்கு அடுத்தபடியாக தெரிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இவர்கள் நான்கு பேரும் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள்.

ஐ.பி.எல்லில் இவர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இந்த தொடரின் முடிவில் இவர்களில் ஒருவர் டோனியின் இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பை பெறுவர் என்று கூறப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி